இறைவர் : அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
இறைவி :ஸ்ரீ பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
தல மரம் : இலந்தை மரம்
தீர்த்தம் : கொள்ளிடம், கவுரி தீர்த்தம்
Arulmigu Piranava Vyakrapureeswarar Temple, Vomampuliyur,Cuddalore | அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்- ஓமாம்புலியூர்,கடலூர் தல வரலாறு
தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சதானந்தன் என்ற அரசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். இவன் சிவபக்தன்.அசரீரியின் வாக்குப்படி இவ்வூரிலுள்ள வர்ந்தனான் குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான். திருநாளைப்போவார் என்று போற்றப்பெறும் நந்தனார் அவதரித்த தலம். இன்று மேலாநல்லூர் எனப்படுகிறது. நந்தனார் பிறந்த ஊர் மேலா நல்லூர் எனப்படும் மேற்கா நாட்டு ஆதனூர்என்பதே. . இதுவே திரிந்து மேலாநல்லூர் ஆனது
தலபெருமை:
உமாதேவியார் “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி, பூமிக்கு வந்தார். அவர் ஓமாப்புலியூரில் தங்கியிருந்து சிவனை வணங்கி உபதேசம் பெற்றார். சிவன் தெட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே. காரணம் ஆகும்.

பிரார்த்தனை:
கல்வி, கேள்விகளில் சிறந்து திகழ இங்கு அதிகளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்- ஓமாம்புலியூர் - ஓமாம்புலியூர் ஓமாம்புலியூர் கடலூர் மாவட்டம். ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்
அமைவிடம்: